ஆண்டிப்பட்டி அருகே சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பலி

ஆண்டிப்பட்டி அருகே சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பலியானார்.
ஆண்டிப்பட்டி அருகே சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பலி
Published on

ஆண்டிப்பட்டி:

வத்தலக்குண்டு அருகில் உள்ள விருவீடு பகுதியை சேர்ந்த பேயத்தேவர் மகன் கபிலன் (வயது21). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ராஜலிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தார். பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அரப்படிதேவன்பட்டி என்ற இடத்தில் வந்தபோது சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கபிலன் உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com