ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலுவைச்சேரி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சன்னாசி (வயது 75). கூலித்தொழிலாளியான இவர் ஆண்டிமடத்துக்கு உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சிலம்பூர் ரோட்டிலிருந்து ஆண்டிமடம்-விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் வரும்போது, சன்னாசியின் காலணி கீழே விழுந்தது.

இதனையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காலணியை எடுக்க முயன்றபோது, தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் புழுதிக்குடி கீழத் தெருவை சேர்ந்த மகாராஜன் (64) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சன்னாசி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சன்னாசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கீழே விழுந்ததில் மகாராஜனும் காயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com