ஆந்திராவில் தேடப்பட்ட பிரபல கொள்ளையன் கொடைக்கானலில் கைது

ஆந்திராவில் தேடப்பட்ட பிரபல கொள்ளையன் கொடைக்கானலில் கைது செய்யப்பட்டான்.
ஆந்திராவில் தேடப்பட்ட பிரபல கொள்ளையன் கொடைக்கானலில் கைது
Published on

பெருமாள்மலை:

ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டம் வெமிகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). இவர் அம்மாநிலத்தில் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆந்திரா போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் திடீரென தலைமறைவானார். இதனையடுத்து அண்டை மாநிலத்தில் பதுங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் வெங்கடாசலம் தனது குடும்பத்துடன் தங்கி இருப்பதாக ஆந்திர போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது இதனையடுத்து இங்கு விரைந்து வந்த அவர்கள் கொடைக்கானல் போலீசார் உதவியுடன் வெங்கடாசலத்தை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இவர் கனிம வள கொள்ளை நடத்தி ரூ.2 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர் ஆவார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com