ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி- ஜெகன்மோகன் ரெட்டி

திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் நேற்றிரவு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி
Published on

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியதால் 11 நோயாளிகள் உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து ஆக்சிஜன் டேங்கர் வருவதற்கு சற்று நேரமானதாலும், இதற்கிடையில் மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் ஐ.சி.யூ.-வில் வென்டிலேட்டர்களில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜனை வழங்க மொத்த சிலிண்டர்களையும் பயன்படுத்தியதாலும் இந்த சோக சம்பவம் நடைபெற்றதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் ஹரி நாரயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார் என்பதை முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com