

அமராவதி:
ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை ஆந்திர முதலமைச்சரிடம் வழங்கினர்.
மேலும், சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர்.