ஆந்திராவில் 2 அரசு அதிகாரிகள் வீட்டில் ரூ.500 கோடி சொத்து பறிமுதல்

ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறையினர் 2 அரசு அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், தங்க நகை, வைர நகைகள் சிக்கின.
ஆந்திராவில் 2 அரசு அதிகாரிகள் வீட்டில் ரூ.500 கோடி சொத்து பறிமுதல்
Published on

நகரி:

ஆந்திர மாநிலத்தில் நகர்ப்புற வளர்ச்சி கழக இயக்குனர் கோல வெங்கடரகு.

இவரது நண்பர் வெங்கட சிவபிரசாத் விஜயவாடா மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்து இருப்பதாக புகார் வந்தன.

நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த அவர்கள் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருந்தனர்.

இதையடுத்து ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறையினர் 2 அரசு அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இருவரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 23 இடங்களில் சோதனை நடந்தது.

இதில் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், தங்க நகை, வைர நகைகள் சிக்கின. வாஷிங்மிஷினில் நகைகளை பதுக்கி வைத்து இருந்தனர். பல ஏக்கர் நிலங்கள் ஆவணங்கள் சிக்கின. இது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தது.

கட்டிட காண்டிராக்டர்களுடன் கூட்டு சேர்ந்து திட்டங்களுக்கு முறைகேடாக அனுமதி கொடுத்து லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. மேலும் அவர்கள் மூலம் கட்டிடம் கட்டி அனுமதி கொடுத்து விற்று உள்ளனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆர்.பி. தாக்கூர் கூறியதாவது:-

இரண்டு அரசு அதிகாரிகளின் சொத்துக்களை ஆய்வு செய்த போது 2007-08ம் ஆண்டு கால கட்டத்தில் பெறும் அளவில் உயர்ந்து இருக்கிறது.

சிவபிரசாத்துக்கு 1992-ம் ஆண்டு ஒரே ஒரு வீடு மட்டுமே இருந்தது என்றார். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com