6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சுனாமியா?: மனித மண்டைஓடு மூலம் கண்டறிந்த விஞ்ஞானிகள்

சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் மண்டைஓடு கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சுனாமியா?: மனித மண்டைஓடு மூலம் கண்டறிந்த விஞ்ஞானிகள்
Published on

ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள சிறிய தீவான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1929-ம் ஆண்டு ஐடாப் என்ற இடத்தில் மனித மண்டைஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த மண்டைஓடு எத்தகைய காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வந்தனர்.

1998-ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட ஒரு சுனாமி தாக்குதலுக்கு பின்னர், இங்குள்ள மண் மற்றும் அந்த மண்டைஓடு ஆகியவற்றை சர்வதேச குழு ஒன்று ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது.

இந்நிலையில், 1929-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட மண்டைஓடு சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும், இதற்கு சொந்தமான நபர் சுனாமி தாக்குதலால் இறந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி ஏற்பட்டதற்கான புவியல் கூறுகள் கண்டெடுக்கப்பட்ட மண்டைஓடுகளில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com