பூச்சியை கொல்ல முயன்று வீட்டையே இழந்த முதியவர்

பிரான்சில் இரவு உணவுக்கு இடையூறாக இருந்த ஈயை கொல்ல முயன்று வீட்டையே முதியவர் ஒருவர் இழந்து உள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பாரீஸ்:

பிரான்ஸ் நாட்டில் செனாட் என்ற கிராமத்தில் வசிக்கும் 82 வயது முதியவர் இரவு உணவு சாப்பிடுவதற்காக அமர்ந்து உள்ளார்.  அந்நேரத்தில் அவரை சுற்றி ஈ ஒன்று வட்டமடித்து உள்ளது.

இதனால், அதனை கொல்வதற்காக மின்சார பேட் ஒன்றை பயன்படுத்தி உள்ளார்.  ஆனால், துரதிர்ஷ்டவசம் ஆக அவரது வீட்டின் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.  இதனை அவர் கவனிக்கவில்லை.

அந்த முதியவர் ஈயை கொல்லும் முயற்சியில் பயன்படுத்திய மின்சார பேட்டில் இருந்து கிளம்பிய நெருப்பு, எரிவாயுவை பற்றி கொண்டு சிலிண்டரை அடைந்தது.  இதில், பெருத்த வெடிசத்தம் கேட்டுள்ளது.

என்னவென்று யோசிப்பதற்குள் அவரது வீட்டு சமையல் அறை முழுவதும் இடிந்து விட்டது.  வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதியும் சேதமடைந்து விட்டது.

இதுபோக முதியவரின் கையில் தீப்பற்றியதில் காயம் ஏற்பட்டு உள்ளது.  பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவரது வீடு வசிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையில் இல்லை.  இதனால் வேறு இடத்தில் அவர் தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  எனினும், இந்த வெடிவிபத்தில் ஈயானது என்ன ஆனது என்று தெளிவாக தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com