அந்தமானில் இரண்டாவது முறையாக இன்று நிலநடுக்கம் - ரிக்டரில் 5.2 என பதிவு

அந்தமான் தீவுப்பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரிக்டர் அளவில் 5.2 ரிக்டர் அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. #EarthQuake
அந்தமானில் இரண்டாவது முறையாக இன்று நிலநடுக்கம் - ரிக்டரில் 5.2 என பதிவு
Published on

போர்ட் பிளேர்:

வங்கக்கடலில் உள்ள தீவுக்கூட்டங்களான அந்தமான் தென்கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சேதங்கள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், நண்பகல் 12.42 மணியளவில் 5.2 ரிக்டர் அளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com