நிகோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

நிகோபார் தீவுகளில் இன்று பிற்பகல் 4.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நில்நடுக்க அளவை காட்டும் படம்
நில்நடுக்க அளவை காட்டும் படம்
Published on

புதுடெல்லி:

நிகோபார் தீவுகளில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது.

பிற்பகல் 2.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

குஜராத்தின் கட்ச் பகுதியில் நேற்று முன்தினம் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com