வெள்ளகோவில் அருகே கல்லூரி பஸ் மீது ஆம்னி வேன் மோதி 2 பேர் பலி

வெள்ளகோவில் அருகே தனியார் கல்லூரி பஸ் மீது ஆம்னி வேன் மோதி 2 பேர் பலியானார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் சிக்கிய கல்லூரி பஸ்-ஆம்னி வேன் சேதம் அடைந்துள்ள காட்சி.
விபத்தில் சிக்கிய கல்லூரி பஸ்-ஆம்னி வேன் சேதம் அடைந்துள்ள காட்சி.
Published on

வெள்ளகோவில்:

கரூர் மாவட்டம் பரமத்தியில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருப்பூர் பகுதிகளை சேர்ந்த மாணவிகள் படித்து வருகிறார்கள்.

அவர்கள் இன்று காலை கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் புறப்பட்டு சென்றனர். இந்த பஸ் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே சென்னையில் இருந்து கோவைக்கு தார் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி வந்தது.

அதன் பின்னால் தஞ்சையில் இருந்து திருப்பூருக்கு ஒரு ஆம்னி வேன் வந்தது. இந்த வேன் லாரியை முந்த முயன்றது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கல்லூரி பஸ் மீது மோதியது. இதில் ஆம்னி வேனில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள். அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

ஒருவர் காயம் அடைந்தார். அவர் காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பஸ்சில் வந்த கல்லூரி மாணவிகள் 10 பேருக்கு சிறுகாயம் ஏற்பட்டது.

அவர்களும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்கள். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com