டெல்லியில் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் அ.ம.மு.க. பங்கேற்பு

டெல்லியில் பாராளுமன்றத்தின் முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அமமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
Published on

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றத்தின் முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் மற்றும் முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சார்பில் துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராகேஸ்வரன் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com