அ.ம.மு.க. பிரமுகரின் மகள் காதலனுடன் போலீசில் தஞ்சம் - பேஸ்புக்கில் பழகிய வாலிபரை மணந்தார்

அ.ம.மு.க. பிரமுகரின் மகள் காதலனுடன் ஒரத்தநாடு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி லலிதா. இவர் அ.ம.மு.க. வார்டு செயலாளராக உள்ளார். இவர்களது மகள் குணவதி (வயது 24). இவர் தஞ்சையில் செயல்படும் தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

இவருக்கும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த துரை மகன் ராம்குமார் என்பவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற குணவதி மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது பற்றி பாலகிருஷ்ணன் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாயமான குணவதி காதலன் ராம்குமாருடன் சென்று உள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு கோவிலில் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்துள்ளனர். பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்ட தகவல் அறிந்த அவர்கள் இன்று காலை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதை தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com