அரியலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்

அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டத்தில்  நாளை அம்மா திட்ட முகாம்
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஆறாவது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை 09.11.2018 அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அரியலூர் வட்டத்தில் பெரிய திருக்கோணம், மேலப்பழூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் கோடங்குடி (தெ), காட்டகரம்(தெ) ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் செந்துறையிலும், ஆண்டிமடம் வட்டத்தில் இடையக்குறிச்சி கிராமத்திலும் நடைபெறுகிறது.

இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே   பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  கொள்ளுமாறு  மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com