சென்னையில் 5 இடங்களில் நாளை ‘அம்மா திட்ட முகாம்’

சென்னையில் மாம்பலம், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
சென்னையில் 5 இடங்களில் நாளை ‘அம்மா திட்ட முகாம்’
Published on

சென்னை:

சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட “அம்மா திட்டம்” (அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கும் திட்டம்) சென்னை மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) 5 வட்டங்களில் நடைபெற உள்ளது.

இதில் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான கோரிக்கைகள் மீது தீர்வு செய்யப்படும்.

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ துறை மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்சனைகள், நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்த கோரிக்கைகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இம்முகாம்களில் தொடர்புடைய வட்டத்திற்குள் வசிக்கும் பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரில் அளித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகாம்கள் நடக்கும் 5 இடங்கள் விபரம் வருமாறு:-

மாம்பலம்- பெருநகர சென்னை மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கம், ராகவரெட்டி காலனி, ஜாபர்கான்பேட்டை.

மயிலாப்பூர்- பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கல்லூரி, அருணாச்சலம் தெரு, சேப்பாக்கம்.

தண்டையார்பேட்டை - பெருநகர சென்னை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம், ஜெ.ஜெ.நகர் மெயின் ரோடு, கொருக்குப்பேட்டை.

பெரம்பூர்- பெருநகர சென்னை மாநகராட்சி சமூக நலக்கூடம், ராஜா தெரு, செம்பியம்.

எழும்பூர் - பெருநகர சென்னை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம், எண்.9, குட்டி தெரு, நுங்கம்பாக்கம், சென்னை.

X

Maalai Malar
www.maalaimalar.com