தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இல்லை - அமித்ஷா

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அமித்ஷா
அமித்ஷா
Published on

புதுடெல்லி:

உள்துறை மந்திரி அமித்ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும், தேசிய மக்கள் தொகை பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக விவாதிக்க எந்தவித தேவையும் இல்லை, பிரதமர் சரியாக கூறியுள்ளார், நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இது குறித்து விவாதம் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com