அமைந்தகரையில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

அமைந்தகரையில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைந்தகரையில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
Published on

போரூர்:

அமைந்தகரை ஷெனாய் நகர் செங்கல்வராயன் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி சரண்யா. கடந்த 24-ந்தேதி சரண்யா தனது குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு சீர்காழியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று அதிகாலை திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது விலை உயர்ந்த கேமரா, லேப்டாப், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அமைந்தகரை போலீசில் சரண்யா புகார் அளித்தார். போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் வசந்தன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் உருவம் பதிவாகி இருந்தது.

இதனை வைத்து கொள்ளையில் ஈடுபட்டது வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரகு, டிபி சத்திரத்தை சேர்ந்த தினேஷ், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வினோத் குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com