அமைந்தகரை அருகே செல்போனில் விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து பலி

அமைந்தகரை அருகே செல்போனில் விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைந்தகரை அருகே செல்போனில் விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து பலி
Published on

போரூர்:

அமைந்தகரை பி.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சைங்கம் சிம்ராங் (வயது28). மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு முதல் அதிகாலை 2 மணி வரை செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com