சீன நிலநடுக்க பாதிப்புக்கு பிரதமர் மோடி இரங்கல்

எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சீன நிலநடுக்க பாதிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
சீன நிலநடுக்க பாதிப்புக்கு பிரதமர் மோடி இரங்கல்
Published on

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த செவ்வாய்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், அங்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இதுவரை சுமார் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரவாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், சீன நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி சீன நிலநடுக்கத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com