டெல்லி: 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற அமெரிக்க பெண் கைது

டெல்லியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்த முயன்ற அமெரிக்க பெண்ணை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்தனர்.
டெல்லி: 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற அமெரிக்க பெண் கைது
Published on

புதுடெல்லியில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்த முயன்ற அமெரிக்க பெண்ணை நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ குழு கைது செய்தது.  புதுடெல்லி பகார்கான் பகுதியில் பிங்க் சிட்டி ஹோட்டலில் தங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அவரது பெயர் ஸ்டெபானி காப்ரியோ பொலிகாரியோ  என்றும், ஒரு நைஜிரியாரால் பிரேசிலில் இருந்து இந்த போதை பொருள் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எத்தியோபியாவில் இருந்து வரும் விமானத்தின் வழியாக பிரேசில் இருந்து  இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அவர் பிப்ரவரி மாதம் முதல் ஸ்பெயினில், சுவிட்சர்லாந்திலும் மற்றும் உகாண்டாவிலும் பயணித்ததாக பாஸ்போர்ட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com