ஆம்பூர் அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

ஆம்பூர் அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 54) கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற வேன் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி தனலட்சுமி (45). இவர் நேற்று வீரகோவில் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு தனலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com