காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்? அம்பிகா சோனி மறுப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்? அம்பிகா சோனி மறுப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக வெளியான தகவலை அம்பிகா சோனி மறுத்துள்ளார். மேலும், தன்னுடைய பணியை குறைக்குமாறு கட்சி தலைமையிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் அம்பிகா சோனி, அக்கட்சியின் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் பொறுப்பாளராக உள்ளார். இதற்கிடையே அவர் கட்சியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அம்பிகா சோனி, “ராஜினாமா என்ற கேள்விக்கே இடம் கிடையாது,” என்றார்.

“என்னுடைய உடல் நிலை காரணமாக என்னுடைய பணிச் சுமையை குறைக்க கட்சி தலைமையிடம் கேட்டுக் கொண்டேன். அதேசமயம், புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படும்வரை எனது பொறுப்புகளை நிறைவேற்றுவேன்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் இவ்வாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மூன்று மலைபிரதேச மாநிலங்களுக்கும் பயணம் செய்ய முடியவில்லை என கடந்த ஆண்டே கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்து உள்ளேன்’ என்றார் அம்பிகா சோனி.

அம்பிகா சோனி ராஜினாமா தொடர்பாக எதிரிகளால் பரப்பப்படும் மோசமான செய்திகளை நிராகரிப்பதாகவும், கட்சியில் உள்ள அனுபவம் வாய்ந்த திறமையான தலைவர்களில் அம்பிகா சோனியும் ஒருவர் என்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com