அமர்நாத் யாத்திரை: நேற்று ஒரே நாளில் 4650 பேர் தரிசனம்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத் பனி லிங்கத்தை நேற்று மட்டும் 4650 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை: நேற்று ஒரே நாளில் 4650 பேர் தரிசனம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், யாத்திரையின் 21-வது நாளான நேற்று 4650 பேர் பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக யாத்திரைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களையும் சேர்த்து 40 நாள் யாத்திரையில் இதுவரை 2,31,997 பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com