

இதுகுறித்து அர்சென் வெங்கர் கூறுகையில் ‘‘எனது வாழ்க்கையில் நான் இந்தியா செல்வதை தவற விட்டுவிட்டதும் ஒன்று. நான் இந்தியா செல்வ ஆர்வாக இருக்கிறேன். அது ஏன் என்று தெரியவில்லை. இதுவரை அங்கு சென்றதில்லை.
நான் எப்போதுமே அர்செனல் அணி இந்தியா சென்று விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். இதற்கான வாய்ப்பு நெருங்கி வந்தது. ஆனால் இதுவரை நிகழ்ந்தது இல்லை. அங்குள்ள சமூகம் மாறுபட்டது. அங்குள்ள தத்துவம் மற்ற நாடுகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது’’ என்றார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று அர்செனல் எஃப்சி. இந்த அணியின் பயிற்சியாளராக அர்செனே வெங்கர் பணியாற்றி வருகிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 68 வயதாகும் அர்சென் வெங்கர் கடந்த 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்செனல் அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றார்.
இவரது தலைமையில் அர்செனல் 21 சீசனில் விளையாடி மூன்று முறை பிரீமியர் லீக் டைட்டிலை வாங்கியுள்ளது. அத்துடன் 7 முறை எஃப்ஏ கோப்பையையும், 7 முறை கம்முனிட்டி ஷில்டையும் கைப்பற்றியுள்ளது. 20 வருடமாக தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விளையாடியுள்ளது. 704 வெற்றிகளை பெற்றுள்ளது.