ஆழ்வார்குறிச்சி அருகே முதியவர் மர்ம மரணம்

ஆழ்வார்குறிச்சி அருகே முதியவர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

ஆழ்வார்குறிச்சி:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 70), கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து ராமசாமி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை கீழ ஆம்பூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ராமசாமி மகன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமசாமி மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com