ஆழ்வார்குறிச்சியில் கால்வாயில் விழுந்து முதியவர் பலி

ஆழ்வார்குறிச்சியில் கால்வாயில் விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

நெல்லை:

அம்பை அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் பண்டாரம்(வயது 80). இவருக்கு கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த 19-ந்தேதி பண்டாரம் வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ராவுத்தபேரியில் உள்ள கால்வாய் ஒன்றில் அவர் பிணமாக கிடந்தார். அவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது வயது முதிர்ச்சியின் காரணமாக தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com