இறக்குமதி செய்த காளானை சாப்பிட்டு வெள்ளையானவர் மோடி: அல்பேஷ் தாக்குர் குற்றச்சாட்டு

இறக்குமதி செய்யப்பட்ட காளான்களை சாப்பிட்டு வெள்ளையானவர் பிரதமர் மோடி. எனவேதான் அவர் அழகாக மாறியுள்ளார் என குஜராத் காங்கிரசுடன் கூட்டணி வைத்த அல்பேஷ் தாக்குர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இறக்குமதி செய்த காளானை சாப்பிட்டு வெள்ளையானவர் மோடி: அல்பேஷ் தாக்குர் குற்றச்சாட்டு
Published on

இறக்குமதி செய்யப்பட்ட காளான்களை சாப்பிட்டு வெள்ளையானவர் பிரதமர் மோடி. எனவேதான் அவர் அழகாக மாறியுள்ளார் என  குஜராத் காங்கிரசுடன் கூட்டணி வைத்த அல்பேஷ் தாக்குர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

குஜராத்தில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அங்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள படேல் இன தலைவர்களில் ஒருவரான அல்பேஷ் தாக்குர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கறுப்பாகதான் இருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி பளபளவென வெள்ளையாக காணப்படுகிறார். இதற்கு என்ன காரணம் தெரியுமா?

பிரதமர் மோடி தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளானை சாப்பிடுகிறார். ஒரு காளானின் விலை ரூ.80 ஆயிரம். தினமும் 5 காளான் சாப்பிடுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com