

அல்லிநகரம்:
அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது யாகியா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அல்லிநகரம் முனீஸ்வரன் கோவில் அருகே தேனி சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 26), தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த சேது ஆகியோர் விற்பனை செய்வதற்காக ஒரு ஆட்டோவில் மதுபாட்டில்களை ஏற்றி கொண்டிருந்தனர். இதனைக்கண்ட போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதேபோல் கிருஷ்ணாநகரம் சாலையில் மதுபானம் விற்ற பொம்மயகவுண்டன்பட்டியை சேர்ந்த திருப்பதி (49), அன்னஞ்சி விலக்கில் மதுவிற்ற பொம்மையகவுண்டன்பட்டி ஒண்டிவீரன் நகரை சேர்ந்த கருப்பசாமி (33), ரத்தினாநகர் பிரிவில் மதுபானம் விற்ற அல்லிநகரம் தெற்குகுளத்து தெருவை சேர்ந்த சீனிவாசன், அல்லிநகரம் காந்திநகரை சேர்ந்த ஈஸ்வரன், கிருஷ்ணாநகரில் மதுபானம் விற்ற பெரியகுளத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 138 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.