அலகாபாத்: படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி - காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்

அலகாபாத் அருகே கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், 5 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
அலகாபாத்: படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி - காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
Published on

அலகாபாத்:

உத்தர பிரதேசத்தில் அலகாபாத் அருகே கங்கை ஆற்றில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது திடீரென அந்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் படகில் பயணித்தவர்களில் ஒருவர் நீருக்குள் மூழ்கி பலியாகியுள்ளார். 5 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். சுமார் 19 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. காணாமல் போன பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதமும் அலகாபாத் பகுதியில் நடந்த ஒரு படகு விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com