ஜி.எஸ்.டி. வரியை நிறைவேற்றும் முன் அனைவரையும் அழைத்து பேச வேண்டும்: முன்னாள் எம்.பி. பிருந்தாகரத்

ஜி.எஸ்.டி. வரியை நிறைவேற்றும் முன் அனைவரையும் அழைத்து பேச வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி. பிருந்தாகரத் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி. வரியை நிறைவேற்றும் முன் அனைவரையும் அழைத்து பேச வேண்டும்: முன்னாள் எம்.பி. பிருந்தாகரத்
Published on

திருவண்ணாமலையில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பிருந்தாகரத் கலந்து கொண்டார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக ஆளும் பா.ஜ.க. அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. விவசாயிகளும், தலித் மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்திதான் வருகின்றனர். தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இது நடைபெறுகிறது என்பது வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு 3 அணிகளாக பிரிந்து செயல்படுகிறது. மோடி அரசை எதிர்த்து போராடாமல், இந்த 3 அணிகளும் நெருக்கமாகவே இருக்க போராடுகிறது. அ.தி.மு.க. அரசை எதிர்த்து மக்கள் கிளர்ந்து எழுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. ஜி.எஸ்.டி. வரி எங்களுக்கு சந்தோ‌ஷம் அளிக்கவில்லை. வரியை நிறைவேற்றும் முன் அனைவரையும் அழைத்து பேச வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com