லாரிகள் வேலை நிறுத்தத்தால் 80 சதவீத வர்த்தகம் முடக்கம்: மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தகவல்

டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., சுங்க கட்டண கொள்கை போன்றவைக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் 70 முதல் 80 சதவீத வர்த்தகம் முடங்கி உள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் 80 சதவீத வர்த்தகம் முடக்கம்: மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தகவல்
Published on

புதுடெல்லி:

டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., சுங்க கட்டண கொள்கை போன்றவைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி.) சார்பில் நாடு முழுவதும் 2 நாள் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்றும், இன்றும் இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.

இந்த வேலை நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் லாரி போக்குவரத்து கடுமையாக முடங்கியது. மும்பையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், மன்குர்ட் சோதனைச்சாவடியில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த முதல் நாள் போராட்டம் முழு வெற்றியடைந்து இருப்பதாக ஏ.ஐ.எம்.டி.சி. தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் மையக்குழு தலைவர் பால் மால்கிட் சிங் கூறுகையில், ‘எங்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தின் முதல் நாளான இன்று (நேற்று) நாடு முழுவதும் 70 முதல் 80 சதவீத வர்த்தகம் முடங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு நாங்கள் விலக்கு அளித்து இருந்த போதும், பொருட்களின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com