இமாச்சல பிரதேசத்தில் பள்ளிகளுக்கு 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தீபாவளி விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் ஆறு நாட்கள் இயங்காது என இமாச்சல பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மக்கள் அதற்கு தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் இமாச்சல பிரதேச அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்வித்துறைக்கு கீழ் இயங்கும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

அதன்படி இமாச்சல பிரதேசத்தில் வருகிற திங்கள் (நவம்பர் 1-ந்தேதி) முதல் சனிக்கிழமை (6-ந்தேதி) வரை பள்ளிகள் திறக்கப்படாது. ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுமுறை என்பதால் ஏழு நாட்கள் பள்ளிகள் இயங்காது. அதன்பிறகு திங்கட்கிழமை (நவம்பர் 8-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com