அனைத்து நாணயங்களும் செல்லும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அனைத்து நாணயங்களும் செல்லும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Published on

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம், சமூகம், கலாசாரம் போன்ற பல்வேறு கருப்பொருளை மையமாக வைத்து நாணயங்கள் வெளியிடப்படுகிறது. நாணயங்கள் நீண்டகாலமாக புழக்கத்தில் இருக்கும்.

அதேநேரத்தில் பல புதிய வடிவங்களில், புதிய உருவங்களிலும் வெளியிடப்படும். இதில் நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நாணயங்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் கிளப்பப்படுகிறது. இதனால் சில வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் அந்த குறிப்பிட்ட நாணயங்களை வாங்க மறுப்பதாக தெரிகிறது.

பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம். அதேபோல அனைத்து வங்கிகளும் நாணயங்களை மாற்றுவதற்கு வரும் பொதுமக்களை திருப்பி அனுப்ப வேண்டாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com