

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியமைத்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமாரின் இந்த திடீர் கூட்டணியை ஏற்க முடியாது என கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் விமர்சித்திருந்தார். மேலும், ஆட்சி அதிகாரம் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ் குமார் வசம் இருப்பதாகவும், ஒரிஜினல் கட்சி தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.
இதனால் சரத் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர்கள் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடத்திய எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. அலி அன்வர் அன்சாரி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் மோடி அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட அனைத்து எதிர்க்கட்சிளும் ஒப்புக்கொண்டன.