அல்ஜீரியா நாட்டில் கோர விபத்து: ராணுவ விமானம் விபத்தில் 257 பேர் பலி

அல்ஜீரியா நாட்டில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 257 பேர் பலியாகினர். #Algeria #MilitaryPlaneCrash
அல்ஜீரியா நாட்டில் கோர விபத்து: ராணுவ விமானம் விபத்தில் 257 பேர் பலி
Published on

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, அல்ஜீரியா. அந்த நாட்டின் தலைநகரான அல்ஜீயர்ஸ் நகருக்கு அருகே உள்ள பவ்பாரிக் என்ற இடத்தில் இருந்து ராணுவ விமானம் ஒன்று, வீரர்களை ஏற்றிக்கொண்டு பெச்சார் என்ற இடத்தில் உள்ள ராணுவ தளத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றது.

ஆனால் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.

அந்த விமானம், பவ்பாரிக் விமான தளத்துக்கு வெளியே வயல்வெளியில் விழுந் தது. விழுந்த உடன் விமானத்தில் தீப்பிடித்து கரும்புகை மண்டலம் உருவானது. அதைக் கண்டதும் அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். ஏராளமான ஆம்புலன்சுகளும் அங்கு சென்றன. தீயணைப்பு படையினர் தண்ணீரைப்பீய்ச்சி தீயை அணைத்தனர்.

இந்த விமானம் விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணம் செய்த 247 ராணுவ வீரர்கள், 10 சிப்பந்திகள் என 257 பேரும் பலியாகி விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com