புன்னம் சத்திரம் அருகே மது விற்றவர் கைது

புன்னம் சத்திரம் அருகே திருட்டுத்தனமாக பிராந்தி பாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே பெரியரங்கம்பாளையம், கண்ணாம்பரப்புபாறை பகுதியில் திருட்டுத்தனமாக பிராந்தி பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பிராந்தி பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. 

சுற்றி வளைத்து பிராந்தி பாட்டில்களை விற்பனை செய்த பெரியரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 49) என்பவரை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com