நாகை அருகே மதுபாட்டில் கடத்தியவர் கைது

நாகை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில் கடத்தி வந்தவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின்பேரில் நாகூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று இரவு மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது திட்டச்சேரி சாலை வழியாக சந்தேகப்படும்படி ஒரு நபர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின்னாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர் கையில் மறைத்து வைத்திருந்த பையை சோதனை செய்தனர். சோதனையில் அவர் புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே அவரை நாகூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் சங்கமங்கலம் ஓட மேட்டு தெருவைச் சேர்ந்தஆசீர்வாதம் (வயது 48) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து ஆசீர்வாதத்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com