மூலைக்கரைப்பட்டி அருகே மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

மூலைக்கரைப்பட்டி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

களக்காடு:

மூலைக்கரைப்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் சம்பவத்தன்று முனைஞ்சிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சந்தை அருகே சென்ற போது போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்தார். உடனே போலீசார் அவரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். இதில் அவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முனைஞ்சிபட்டியை சேர்ந்த பிரமுத்து (வயது 63) என்பதும், மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com