டி.என்.பி.எல்: திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் தூத்துக்குடி அபார வெற்றி

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அபார வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல்: திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் தூத்துக்குடி அபார வெற்றி
Published on

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அபார வெற்றி பெற்றது.

2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் ரூபி திருச்சி வாரியர்சும் பலபரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில், அதிகபட்சமாக பரத் சங்கர்(40), இந்திரஜித்(30) ரன்கள் எடுத்தனர்.

தூத்துக்குடி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் சும்ரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 121 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய தூத்துக்குடி அணி 15.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது.

27 பந்துகள் மீதமிருந்த நிலையில், 10 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான வாஷிங்டன் 49(55), கவுசிக் காந்தி 72(55) ரன்கள் எடுத்தனர். கவுசிக் காந்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com