

பேரூர்:
கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே நரசீபுரம் பிரிவு ஜவ்வுகாடுபகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர். அதில் அந்த நபர், வன எல்லையோரத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த காட்டு யானை அவரை தாக்கி கொன்றது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.