ஆலங்குளம் அருகே முதியவர் மீது தாக்குதல்- போலீசார் விசாரணை

ஆலங்குளம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே முதியவர் மீது தாக்குதல்- போலீசார் விசாரணை
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பெரியார் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது74), கூலித்தொழிலாளி. இவரது உறவினர் இஸ்ரவேல் (55). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று இஸ்ரவேல் மற்றும் அவரது உறவினர்கள் ரவீந்திரன், மாரியப்பன், அசரியா ஆகியோர் சேர்ந்து செல்வராஜிடம் தகராறு செய்தனர். அப்போது அவர்கள் செல்வராஜை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. காயம் அடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com