ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தனர்.
ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி
Published on

ஆலங்குளம்:

திண்டுக்கல் மாவட்டம் கரியாபட்டிணத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது35). இவரது நண்பர் சஞ்சீவ்குமார் (26). இருவரும் நெல்லையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று இவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு சென்றனர். இரவு ஊர் திரும்பினர்.

ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்த போது எதிரே கேரளாவுக்கு லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது.

எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ரவிச்சந்திரன், சஞ்சீவ்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சீதபற்பநல்லூர் மற்றும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இது தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கேரளாவை சேர்ந்த லாரி டிரைவர் அசரப் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com