ஆலங்குளம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணம்
மரணம்
Published on

நெல்லை:

ஊத்துமலை அருகே உள்ள வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மனோகரன்(வயது 33). இவர் கேரளாவில் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு ஊத்துமலை அருகே உள்ள கீழகலங்கலை சேர்ந்த ராமலெட்சுமி என்பவருடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.

மனோகரன் சம்பவத்தன்று காலை கீழகலங்கலில் உள்ள தனது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்விற்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள கிணற்று தொட்டியில் குளிக்க சென்றவர் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க வீட்டிற்கு சென்றவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com