ஆலங்குளம் அருகே அனுமதியில்லாமல் பட்டாசு விற்ற வியாபாரி கைது

ஆலங்குளம் அருகே அனுமதியில்லாமல் பட்டாசு விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 37). இவர் ஆலடிபட்டியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது கடையில் அனுமதி இல்லாமல் பட்டாசு வைத்து வியாபாரம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக ஆலங்குளம் போலீசார் கண்ணன் கடை மற்றும் வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com