ஆம் ஆத்மியில் இணைந்த அஜோய் குமாருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி

காங்கிரசில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அஜோய் குமாருக்கு கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அஜோய் குமார்
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அஜோய் குமார்
Published on

புதுடெல்லி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் அஜோய் குமார். இவர் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா முன்னிலையில் அஜோய் குமார் நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அஜோய் குமாருக்கு கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com