ரூ. 8 ஆயிரம் கோடி நிலுவை தொகையை செலுத்திய ஏர்டெல்

பாரதி ஏர்டெல் நிறுவனம் தொலை தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் ரூ. 8000 கோடியை செலுத்தி இருக்கிறது.
ஏர்டெல்
ஏர்டெல்
Published on


பாரதி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் உள்பட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி நிலுவை வைத்துள்ளன. உரிமம் கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் ஆகியவை நிலுவையில் இருந்தது.

இந்த நிலுவைதொகையை தொலை தொடர்பு நிறுவனங்கள் செலுத்த சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ விதித்து உத்தரவிட்டது. பாரதி ஏர்டெல் நிறுவனம் மொத்தம் ரூ.35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவையில் வைத்து இருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி கடந்த 17-ந்தேதி ஏர்டெல் ரூ.10 ஆயிரம் கோடியை தொலை தொடர்பு துறைக்கு செலுத்தி இருந்தது.

இந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மேலும் ரூ.8004 கோடியை இன்று தொலை தொடர்பு துறைக்கு கட்டியது. இதன் மூலம் அந்த நிறுவனம மொத்தம் ரூ.18,004 கோடி நிலுவை தொகையை செலுத்தி இருக்கிறது. மார்ச் 17-ந்தேதிக்குள் நிலுவை தொகை முழுவதையும் செலுத்தி விடுவதாக ஏர்டெல் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com