தினமும் 3.5 ஜிபி டேட்டா: ஏர்டெல் திட்டம் அதிரடி மாற்றம்

ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு திட்டத்தில் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 3.5 ஜிபி டேட்டா: ஏர்டெல் திட்டம் அதிரடி மாற்றம்
Published on

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏர்டெல் அறிவித்து வழங்கி வரும் ரூ.799 திட்டத்தில் இனி தினமும் 3.5 ஜிபி 3ஜி/ 4ஜி டேட்டா வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. முன்னதாக இதே திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.799 திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799 திட்டத்திற்கு நேரடி போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் வழங்கும் ரூ.799 திட்டம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. முன்னதாக ஜியோ ரூ.799 திட்டம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு, தற்சமயம் அனைத்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.


ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.799 திட்டததில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மற்றும் அனைத்து ஜியோ செயலிகளையும் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இரு நிறுவனங்களின் திட்டங்களில் ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குகிறது.

எனினும் வாய்ஸ் கால் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஜியோ சிறப்பான சேவையை வழங்குகிறது. ஏர்டெல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குவதாக கூறினாலும், தினமும் 250 நிமிடங்களும் வாரத்திற்கு 1000 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. இது உள்ளூர் மற்றும் வெளியூர் என அனைத்து வித அழைப்புகளுக்கும் பொருந்தும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com