ஜியோவை எதிர்கொள்ள புதிய திட்டம்: விரைவில் களமிறங்கும் ஏர்டெல்?

ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை சமாளிக்கும் நோக்கில் பாரதி ஏர்டெல் நிறுவனம் வோல்ட்இ சேவைகளை அடுத்த வாரம் முதல் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜியோவை எதிர்கொள்ள புதிய திட்டம்: விரைவில் களமிறங்கும் ஏர்டெல்?
Published on

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் அடுத்த வாரம் முதல் வோல்ட்இ சேவைகளை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இந்தியாவில் வோல்ட்இ சேவைகளை வழங்கும் இரண்டாவது நிறுவனமாக ஏர்டெல் இருக்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வோல்ட்இ சேவைகளை வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ இந்த சேவையை வழங்கு்ம முதல் நிறுவனமாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மட்டும் வோல்ட்இ சேவையை வழங்கி வரும் நிலையில், மற்ற நிறுவனங்கள் பழைய சர்கியூட்-ஸ்விட்ச் தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வருகின்றன, இதில்  மொபைல் டேட்டா 4ஜி நெட்வொர்க்கில் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் சேவைகளை துவங்கிய ஒரே வருடத்தில் 13 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஜியோ சேர்த்துள்ள நிலையில், மற்ற நிறுவனங்களும் ஜியோ பாணியை கடைபிடிக்க துவங்கியுள்ளன.

ஏர்டெல் நிறுவனத்தின் வோல்ட்இ சேவைகள் முதற்கட்டமாக மும்பையில் துவங்கி, அதன் பின் கொல்கத்தா மற்றும் இதர நாடுகளில் வழங்கப்பட இருக்கிறது. 15 வெவ்வேறு வகையான சாதனங்களில் சோதனையை ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே துவங்கியுள்ளது. இம்முறை வோல்ட்இ சார்ந்த அழைப்புகளில் ஏற்படும் மென்பொருள் இடர்பாடுகளை சரி செய்யும் பணிகள் நடைபெற இருக்கிறது.

இந்த நிதியாண்டின் இறுதிக்குள் பாரதி ஏர்டெல் வோல்ட்இ சேவைகளை நாடு முழுக்க வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனத்தை போன்றே ஐடியா செல்லுலார் நிறுவனமும் தன்பங்கிற்கு வோல்ட்இ சேவைகளை வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது வோல்ட்இ சேவைகளை கொண்டு மேற்கொள்ளப்படும் அழைப்புகளின் தரம் உயர்வாக இருக்கிறது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், வோல்ட்இ அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டத்தை ஜியோ அறிவித்தது.

அந்த வகையில் இந்தியாவில் வோல்ட்இ ஸ்மார்ட்போன்களின் விற்பனைக்கு ரிலையன்ஸ் ஜியோ முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சமீபத்திய ஆய்வு அறிக்கையின் படி, ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மூன்றில் ஒரு ஸ்மார்ட்போனில் வோல்ட்இ வசதி கொண்டிருந்தது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 2017, இரண்டாம் காலாண்டில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் 96 சதவிகிதம் சாதனங்களில் எல்டிஇ வசதி கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com