கோவைக்கு 182 பேருடன் சென்ற விமானத்தில் ‘திடீர்’ கோளாறு

சென்னையில் இருந்து கோவைக்கு இன்று காலை 182 பேருடன் சென்ற ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்
Published on

ஆலந்தூர்:

சென்னையிலிருந்து இன்று காலை 6:15 மணி அளவில் 176 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என 182 பேருடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கோவைக்கு புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் மீண்டும் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு,182 பேர் உயிர் தப்பினர்.

இதையடுத்து விமானத்தை சரிசெய்யும் பணியில் விமான நிலைய என்ஜினீயர்கள் முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. 182 பேரும் வேறு விமானத்தில் காலை 10 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி விமானநிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com