ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய ஏர் இந்தியா விமானம்: 102 பயணிகள் நிலை?

அபுதாபியில் இருந்து கொச்சி வந்த ஏர்இந்தியா விமானம், தரையிறங்கும் போது முன்சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 102 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய ஏர் இந்தியா விமானம்: 102 பயணிகள் நிலை?
Published on

திருவனந்தபுரம்:

அபுதாபியில் இருந்து கேரளா மாநிலம் கொச்சிக்கு 102 பயணிகளுடன் ஏர்இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. பின்னர், அதிகாகலை 2.39 மணி அளவில், கொச்சியில் தரையிறங்கும் போது விமானத்தின் முன்சக்கரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

கேரள மாநிலம் கொச்சின் அருகே நெடும்பாச்சேரியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு இன்று காலை 2.39 மணிக்கு அபுதாபியில் இருந்து இந்தியன் ஏர்வேஸ் விமானம் வந்தது.

விமானம் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் தரை இறங்கிய போது திடீரென விமானத்தின் முன்சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டு, முறிந்து உடைந்தது. இதனால் விமானம் தரை தட்டியப்படி சென்றதால் என்ஜீன் சேதமானது.

விமானம் தரை தட்டியப்படி செல்வதை உணர்ந்த விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தின் வேகத்தை குறைத்து நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் விமானத்தில் இருந்த 102 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த விபத்து பற்றி கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த வாரம் இதேப் போன்று சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில், ஏர் இந்தியா விமானம் ஒன்று, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் சுமார் ஒன்பது மணி நேரத்திற்கும் மேல் தாமதாமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com